யாழில் வர்த்தக நிலையத்தில் தொலைபேசி திருடிய நபர் கைது! (CCTV காணொளி)

யாழ்.திருநெல்வேலி - பரமேஷ்வரா சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை அங்கு வந்த நபர் அங்கிருந்த கையடக்க தொலைபேசி ஒன்றினை திருடி சென்றுள்ளார்.

அதனை கடை உரிமையாளர் கண்காணிப்பு கமராவில் கண்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த போலீசார் வீடியோ பதிவு ஊடாக குறித்த நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, திருடிய கையடக்க தொலைபேசியை தான் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும், வாங்கியவரை தனக்கு அடையாளம் தெரியாது எனவும் கூறியுள்ளார்.

இந் நிலையில் தொலைபேசியை வாங்கியவர் நேற்று தொலைபேசி திருத்துமிடத்துக்கு தொலைபேசியுடன் வந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் தொலைபேசியும் மீட்கப்பட்டது.
 
Previous Post Next Post