இளைஞர் ஒருவரின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்த நபர் ஒருவர் நண்பர் ஒருவரின் பெயரில் அறிமுகமாகி சந்திக்க வருமாறு அழைத்து வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று நண்பகல் கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கோண்டாவிலை சேர்ந்த 27 வயதான இளைஞன் மீதே தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து இளைஞன் கூச்சலிட்டதால் பொதுமக்கள் அங்கு கூடியதால் வாள்வெட்டு குழு மேற்படி இளைஞனின் மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளது.
சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.