யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நிர்வாண நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இரண்டு பெண்களும், 8 வயது சிறுமியும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
தன்னை துஸ்பிரயோகம் செய்ததாக சிறுமி குடும்பத்தினரிடம் தெரிவித்ததால், இந்த கொலை இடம்பெற்றதா என்ற சந்தேகத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வியங்காடு ஜிபிஸ் மைதானத்தின் அருகிலுள்ள வீதியொன்றிலிருந்து நேற்று பகல் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.கணபதிப்பிள்ளை மகேந்திரன் (54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
வீட்டுக்குள் அவர் நிர்வாண கோலத்தில் காணப்பட்டார்.அவரது மனைவி கொடிகாமத்தில் திருமண வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றதாகவும், நேற்று பகல் வீடு திரும்பிய போது, வீட்டுக்குள் மகேந்திரன் சடலமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.பொலிசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
உயிரிழந்தவர் அயல்வீட்டிலுள்ள 8 வயது சிறுமியை தினமும் பாடசாலைக்கு ஏற்றிச் செல்வது வழக்கம். அவர் தன்னை துஸ்பிரயோகம் செய்ததாக சிறுமி பெற்றோருக்கு தெரிவித்ததையடுத்து, அவர்கள் இரண்டு நாட்களின் முன்னர் மகேந்திரனை தாக்கியுள்ளனர்.பொல், கை, கால்களால் அவர் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலால் அவர் உயிரிழந்தாரா என்ற சந்தேகத்தில் பொலிசார் 2 பெண்களையும், 8 வயது சிறுமியையும் தடுத்து வைத்து விசாரித்து வருகிறார்கள்.சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறும். இதன் பின்னரே, மரணத்துக்கான காரணம் தெரிய வரும்.