அதிசொகுசு பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்றிரவு 8 மணியளவில் கோப்பாய் – இராசபாதை சந்திக்கு அண்மையாக இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டத்தை சேர்ந்தவரும் கோப்பாயில் மோட்டார் திருத்தகம் நடத்துபவருமான ரொபின் என்பவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தையடுத்து அதிசொகுசு பேருந்தின் சாரதி தப்பித்த நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார், விபத்து இடம்பெற்ற இடத்தில் கூடிய மக்களை விரட்டிவிட்டு, உயிரிழந்தவரின் சடலத்தை பொலிஸ் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
“விபத்து இடம்பெற்ற அதிசொகுசு பேருந்து கொழும்பு – யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடுகின்றது. அதில் பயணிகள் இருந்தனர். விபத்தையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பேருந்தை தாக்கியதுடன், பொலிஸாரையும் தாக்கினர். அதனால் அப்பகுதியில் கூடியவர்களை அகற்றினோம்” என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.