யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் உள்ள வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 5 பேர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி, வன்னியசிங்கம் வீதியில் உள்ள வீடொன்றின் மீதே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உரும்பிராயைச் சேர்ந்த இளைஞனும், அவருடன் வந்த கும்பலும் வீட்டுக்குள் நுழைந்து உடைமைகளைச் சேதப்படுத்தியதுடன், பெற்றோல் குண்டுத் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் வீட்டில் இருந்த 5 பேர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் இருந்த யுவதியுடன் உரும்பிராயைச் சேர்ந்த இளைஞன் ஒருதலைக் காதலைக் கொண்டிருந்ததாகவும் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரை வற்புறுத்தி மிரட்டி வந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்குப் பெற்றோர் மறுப்புத் தெரிவித்த நிலையிலேயே இத் தாக்குதல் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.