நல்லூர் தீர்த்தத் திருவிழாவான நேற்று இரண்டு வயதும் 6 மாதங்களுமான பெண் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளது என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, செட்டிக்குளத்தைச் சேர்ந்த தம்பதியின் குழந்தையையே காணவில்லை என்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் பெற்றோர் நல்லூர் திருவிழாக் காலத்தில் யாசகம் பெறுவதற்காக வவுனியா செட்டிக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.
நேற்று நல்லூர் ஆலயப் பின்புற வீதியில் சிறுமி இறுதியாகப் பெற்றோருடன் இருந்துள்ளார். அதன்பின்னர் சிறுமியைக் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.