அர்ச்சுனாவின் குழுவுக்குள் பிளவு? குமுறுகிறது ஊசிக் குழு! (வீடியோ)

அர்ச்சுனாவுக்கு கூடயிருந்தே குழிபறிக்கும் குழு உள்ளதாக, அவர் போட்டியிடும் சுயேச்சைக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

வைத்தியர் அர்ச்சுனா தலைமையிலான சிறு குழுவொன்று சுயேச்சையாக களமிறங்கியுள்ளனர். புகழ் விரும்பிகளின் தற்குறித்தனமே இந்த குழுவென பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை எந்த செயற்பாட்டு அரசியலிலும் ஈடுபட்டிருக்காமல், திடீரென வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, அனைத்து அரசியல் தரப்பையும் விமர்சித்து வரும் இந்த விபரீத சுயேச்சைக்குழு உறுப்பினர் மயூரன் என்பவரே இதனை தெரிவித்தார்.

தான் வெறும் 20 நாள் அரசியல்வாதியென்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 20 நாட்களாக ஏற்பட்டு வரும் சர்ச்சைகளின் பின்னணியில் ஒரே புள்ளியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், வைத்தியருக்கு அருகிலிருப்பவர்களே பிரச்சினைகளுக்கு காரணமென்றும் தெரிவித்துள்ளார். வைத்தியரின் தனிமனித ஒழுக்கம் உள்ளிட்ட பல விடயங்களில் தனக்கும் தெளிவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

வைத்தியர் அர்ச்சுனாவையும், பெண் சட்டத்தரணியையும் இணைத்து சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அந்த சட்டத்தரணியை குறிவைத்து விமர்சித்திருக்கலாமென கருதப்படுகிறது.
Previous Post Next Post