உறவினர்களை சந்திப்பதற்காக லண்டனில் இருந்து யாழ். வந்தவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர்களை சந்திப்பதற்காக லண்டனில் இருந்து வருகை தந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். கணேசராசா தியாகராசா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள உறவுகளை சந்திப்பதற்காக லண்டனில் இருந்து கொழும்பிற்கு வருகை தந்து கொழும்பிலிருந்து பேருந்து மூலம் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுள்ளார்.

குறித்த பேருந்து யாழ்ப்பாணத்தினை சென்றடைந்த பின்னர் குறித்த நபர் பேருந்திலிருந்து இறங்காத காரணத்தினால் அவரை எழுப்ப முற்பட்டுள்ளார்.

இதன்போது அவர் மயக்கநிலையில் காணப்பட்டமையினால், 17ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து அங்கு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், நேற்று காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post