யாழ். வடமராட்சியில் விபத்து! (படங்கள்)

வடமராட்சி பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி மந்திகை சாரையடி பகுதியில் இன்று திங்கட்கிழமை இவ்விபத்து இடம் பெற்றுள்ளது. பருத்தித்துறையில் இருந்து வருகை தந்த மோட்டார் சைக்கிளும் மந்திகை பகுதியில் இருந்து வருகை தந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து நடைபெற்றுள்ளது.

குறித்த விபத்தில் அல்வாய் நாவலடி பகுதியைச் சேர்ந்த இராசரத்தினம் கெளதமன் (வயது 39), பருத்தித்துறை விநாயகர் முதலியார் வீதியைச் சேர்ந்த கந்தன் திலகினியன் (வயது 23), பருத்தித்துறை மேற்கு சந்தை வீதியைச் சேர்ந்த அரோன்குமார் அருளாளன் ஆகியோரே காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post