பிரான்ஸில் தமிழ் கடை முதலாளியின் அடாவடி! நடுத் தெருவில் விடப்பட்ட முன்னாள் போராளி!! (வீடியோ)


பிரான்ஸில் தமிழ் கடை நடத்தும் சில முதலாளிகள் விசா இல்லாத தமிழ் இளைஞர்களை பணிக்கமர்த்தி அவர்களுக்குரிய சம்பளத்தை வழங்காது விரட்டியடிக்கப்பட்ட சம்பவங்கள் பல இடம்பெற்று வருகின்றது.

இதனால் தமிழ் இளைஞர்கள் மன உளைச்சல் காரணமாக தவறான முடிவெடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது.

இதுபோன்ற ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் சட்ட உதவி கோரி வந்துள்ளார். குறித்த கடை முதலாளி பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை பணிக்கு அமர்த்தி இவ்வாறு சம்பளம் வழங்காது துரத்திவிட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் சட்டத்துறையை நாடமுடியும் அல்லது காவல்துறையை நாடமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் முழுமையான விபரங்கள் கீழுள்ள காணொளியில் காணலாம்.
Previous Post Next Post