தவறான முடிவெடுத்து பாடசாலை மாணவி உயிரிழப்பு!
இச்சம்பவம் நேற்று (22-11-2024) பொன்னாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் பொன்னாலை மேற்கு பகுதியைச் சேர்ந்த 16 வயதான நடனேஷ்வரன் தாரணி என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த மாணவிக்கும் அவரது தாய் மற்றும் சகோதரனுக்கு இடையே நேற்று காலை முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
குறித்த மாணவியின் பேர்த்தியார் கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த மாணவியின் குடும்பத்தினர் அங்கு சென்றிருந்தனர். இதன்போது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேநீர் அருந்திக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு!
யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சமபவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் மானிப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த 32 வயதான உதயகுமார் சஜிந்தன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த குடும்பஸ்தர் நேற்று (22-11-2024) காலை தனது வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த வேளை திடீரென மயக்கமுற்றுள்ளார்.
இதனையடுத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
இதன்போது மாரடைப்பினால் அவரது மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.