வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகையான பணத்தை அவர்களது வங்கிக் கணக்குகளுக்குப் பெற்ற சம்பவம் தொடர்பில் ஈழத்து இளம் பாடகர்கள் மூவர் நேற்று வவுனியா விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் (SCIB) உத்தியோகத்தர்களால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் மூவரும் இசை குழு ஒன்றை உருவாக்கி, பாடல்களை வெளியிட்டு வந்தனர், அண்மையில் இந்தியா, லண்டன் போன்ற வெளிநாடுகளுக்கு பல இசை நிகழ்ச்சிகளுக்காக சென்றுவந்திருந்தனர்.
இந்த நிலையிலேயே இவர்களின் வங்கிக் கணக்குக்கு பெருந்தொகையான பணம் பரிமாறப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு, வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டு மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா விசேட குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் , தாவடி, கோப்பாய், கோண்டாவிலைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களாவர்.