ESOFT Metro Campus - யாழ்.கிளையின் விருதுகள் வழங்கும் நிகழ்வுகள்! (படங்கள்)

ESOFT Metro Campus - யாழ்ப்பாணக்கிளையின் 2023/24 கல்வியாண்டின் மாணவர்களுக்கான வருடாந்த டிப்ளோமோ விருதுகள் வழங்கும் விழா 23 நவம்பர் 2024 அன்று காலை 10.00 மணிக்கு, யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தின் பிரதான அரங்கில் ஆரம்பமாகியது.

இவ் விழாவானது கல்வி வளவாளர்கள் நடைபவனி (Academic Procession Walk) மூலம் ஆரம்பமானது. கல்வித் துறையின் தலைசிறந்த நிபுணர்கள், விருந்தினர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வின் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிறுவனத்தின் உதவி பொது முகாமையாளர் கஜானன் பாலசுப்பிரமணியம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு. வி. செந்தூரன், பீடாதிபதி, தொழில்நுட்ப பீடம், வவுனியா பல்கலைக்கழகம், கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ விருந்தினராக திரு. ஜே. பிரதீபன், மேலும் இயக்குநர், இலங்கை தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம் - யாழ்ப்பாணம், மற்றும் சிறப்பு விருந்தினராக திரு. எஸ். திரியம்பக சர்மா, Salesforce MVP, பிரதான ஆலோசகர் - Salesforce, கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்பம் (IT), ஆங்கிலம் மற்றும் முகாமைத்துவ (Management) பாடப் பிரிவுகளில் சான்றிதழ் மற்றும் டிப்ளோமா பூர்த்தி செய்த மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட 'SEG UK Awards' சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து வரவேற்பு உரையில் நிறுவனத்தின் உதவி பொது முகாமையாளர் தமது உரையில் 25 வருடங்கள் கல்விச்சேவையில் உள்ள நிறுவனத்தின் வளர்ச்சியையும் தமது மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் உரையில் தெளிவாக கூறியிருந்தார்,

அத்துடன் பிரதம விருந்தினர் வி.செந்தூரன் அவர்கள் கூறுகையில், தொழிமுயற்சி மற்றும் மாணவர்களின் புதியமுறையற்சிகளுக்கான தூண்டுதல்கள் அவசியம் எனவும் அதற்கான முதற்படியினை மாணவர்கள் ஆரம்பித்துள்ளதினை இந்நிகழ்வில் அவர் கண்டுகொள்வதாகவும் தனது பாராட்டுகளையும் மாணவர்களுக்கு தெரிவித்திருந்தார்.

மேலும், 450+ மேற்பட்ட மாணவர்கள் தங்களிற்கான சான்றிதழ்களினையும் பெற்றுக்கொண்டதோடு 22 மாணவர்களுக்கு சிறந்த மாணவர் விருதுகள் (High Achiever Awards) வழங்கப்பட்டன. மேலும், அதி சிறந்த 3 சிறந்த மாணவர்களுக்கு (Most Outstanding Awards) தங்கப்பதக்கங்களும் (Gold-Medals) மற்றும் நினைவுச்சின்னங்கள் (Momentum) வழங்கப்பட்டன.

இறுதியில் விருந்தினர்கள் நினைவுச்சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் தேசியகீதத்துடன் இந்நிகழ்வு இனிதே நிறைவேறியது.
Previous Post Next Post