யாழ்ப்பாணம்.கோப்பாய்,அச்சுவேலி பிரதேசங்களில் அண்மைக்காலமாக கலக்கிய திருடன் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளான்.
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளில் திரிந்து , களவுகளில் ஈடுபட்ட சந்தேகநபர் , கொழும்பில் அதிசொகுசு வீடொன்றினை கொள்வனவு செய்துள்ள நிலையில் , 90 பவுண் நகைகளுடன் கைதாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியை சொந்த இடமாக கொண்ட நபர் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் மலேசியா நாட்டிற்கு சென்று சில காலம் வசித்துள்ளார். பின்னர் மீண்டும் இலங்கை திரும்பி , கொழும்பில் தங்கி வசித்து வந்துள்ளார்.
அந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு கால பகுதி முதல் , கொழும்பில் இருந்து தனது மனைவியுடன் சொகுசு காரில் யாழ்ப்பாணம் வந்து , விடுதிகளில் தங்கி நின்று பகல் வேளைகளில் காரில் மனைவியுடன் சென்று வீடுகளை நோட்டமிட்ட பின்னர் , ஓரிரு வீடுகளை இலக்கு வைத்து , மாலை வேளைகளில் காரில் மனைவியுடன் சென்று, இலக்கு வைத்த வீட்டிற்கு அண்மித்த பகுதிகளில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை களவாடிய பின்னர் , அதிகாலை 1 மணிக்கும் – 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் துவிச்சக்கர வண்டியில் , சென்று வீட்டில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு கொள்வார்.
திருட்டின் போது நகைகள் , பணம் என்பவற்றை மாத்திரமே திருடிக்கொள்வார். தொலைபேசி போன்ற இலத்திரனியல் பொருட்களை திருடுவதில்லை.
திருட்டின் பின்னர் , அந்த வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் மீண்டும் சென்று சந்தேகம் இல்லாத பிறிதொரு இடத்திற்கு மனைவியை காரில் வருமாறு அழைத்து , துவிச்சக்கர வண்டியை அருகில் உள்ள பற்றைக்காடு ஒன்றிற்குள் வீசி விட்டு , காரில் தப்பி கொழும்பு பிரதேசத்திற்கு சென்று விடுவார்கள்.
பின்னர் சில காலம் கழித்து மீண்டும் காரில் யாழ்ப்பாணம் வந்து திருட்டில் ஈடுபட்டு , தப்பி சென்று வந்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற பல்வேறு நபர்களின் முறைப்பாட்டின் பிரகாரம் , 300 பவுணுக்கும் அதிகமான நகைகள் மற்றும் பெருந் தொகை பணம் என்பவை களவு போயுள்ளதாக தெரிவந்துள்ளது.
பொலிசாரின் தீவிர விசாரணைகளை அடுத்து , சந்தேகநபர் கொழும்பில் தனது மனைவியுடன் தலைமறைவாக வாழ்ந்து வருவது தெரிய வந்த நிலையில் யாழில் இருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட வேளை மனைவி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட நகைகளில் 90 பவுண் நகைகள் , நகைகளை விற்று கொழும்பில் அதிசொகுசு வீடு வாங்கிய பத்திரங்கள் , கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் , வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டு உள்ளிட்டவற்றை மீட்டுள்ளனர்.
அதேவேளை , திருட்டு நகைகளை கொழும்பில் அடகு வைத்த நபர்கள் மற்றும் நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான பிரதான சந்தேகநபரை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து வந்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
அதேவேளை தப்பி சென்ற சந்தேகநபரின் மனைவியை கைது செய்யவும் பொலிஸார் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளனர். அத்துடன் இவர்கள் இருவரும் , நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனரா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளில் சந்தேக நபர் , தனது மனைவியுடன் பிரான்ஸ் நாட்டுக்கு தப்பி செல்ல முகவர் ஒருவருக்கு பெருந்தொகை பணம் கொடுத்துள்ளமையும் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.