கிளிநொச்சியில் மதுவுக்கு அடிமையான தாய் சடலமாக மீட்பு! மதுபோதையில் இருந்த 14 வயது மகன் கைது!!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாதன் திட்டம் பகுதியில் குடும்பப்பெண் பரிதாப சாவைடைந்துள்ளார். உயிரிழந்தவரின் 14 வயதுடைய சிறுவன் அதித மது போதையில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்டதாக ஆரம்ப விசரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 14 வயதுடைய சிறுவன் விசாரணைக்காக தர்மபுரம் பொலிசாரால் அழைத்து செல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மரணத்தில் சந்தேகம் நிலவுகின்ற நிலையில் பூர்வாங்க விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற மரண விசாரணை அதிகாரி விசாரணை மேற்கொண்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விசாரணையில் தெரியவந்த நிலையில், முழுமையான விசாரணைக்காக பரிந்துரைத்துள்ளார். இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மாட்ட நீதவானிற்கு அறிக்கை சமர்ப்பித்து விசாரணை செய்வதற்கான நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த உயிரிழந்த தாய்க்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. பொலிஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட 14 வயதுடைய சிறுவனும் அதிக மது போதையில் இருந்துள்ளார். இந்த நிலையில் சிறுவர்கள் மது பழக்கத்துக்கு ஆளாவதாகவும், 16 சில்லறை மதுபானசாலைகள் திறக்கப்பட்டமை மாவட்டத்துக்கு ஆபத்தான நிலையை உருவாக்கும் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது.

மாவட்டத்தில் சிறுவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், மதுபானசாலைகளை மூட வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post