யாழில் வீதியில் நின்றவர்களை மோதிய பேருந்து : தந்தை பலி! மகன் படுகாயம்!!

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெரியவிளான் பத்திரிமா தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் 76 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது நேற்றிரவு 9.30 மணியளவில் பெரியவிளான், பத்திரிமா தேவாலயத்திற்கு அருகாமையில் வீதியில் நின்றுக்கொண்டிருந்த போது தனியார் பஸ் ஒன்று தனது சேவையை முடித்துவிட்டு சென்றுகொண்டிருந்த வேளை தந்தை, மகன் ஆகிய இருவர் மீதும் மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன் சிகிச்சை பலனின்றி தந்தை உயிரிழந்துள்ளதோடு மகன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பஸ்ஸின் சாரதி தப்பிச் சென்ற நிலையில், பஸ்ஸை எடுத்துச் சென்ற இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post