யாழில் எலிக் காய்ச்சல் தொற்று! 23 வயது இளைஞன் உயிரிழப்பு!!

யாழில் எலிக் காய்ச்சல் தொற்றால் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சுகவீனம் காரணமாக பருத்தித்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் அவரின் உடலில் நோய் அதிகாரிக்க யாழ். போதனா வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கோமா நிலைக்கு சென்ற குறித்த இளைஞர் நேற்றிரவு சனிக்கிழமை 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் யாழ். கரவெட்டி தல்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் (வயது - 23) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post