யாழில் நேற்றைய தினம் இரண்டு பேர் தவறான முடிவால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் யாழ்.கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த பூலோவர் ரமேஷ் (வயது-42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை யாழ்.கரவெட்டிப் பகுதியில் தனிமையில் இருந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கரவெட்டி மேற்கைச் சேர்ந்த சுரேஷ் சிவகலக்சன் (வயது-18) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.