பிரான்ஸில் 3 மாத பிரதமர்! கவிழ்க்கப்பட்டது ஆட்சி!!

Michel Barnier தலைமையிலான அரசாங்கம் இடது மற்றும் வலது சாரி கட்சிகளினால் கவிழ்க்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று இரு நம்பிக்கை இல்லா பிரேரணை வாக்களிப்புக்கு வந்த நிலையில், முதலாவது வாக்களிப்பிலேயே Michel Barnier இன் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

189 வாக்குகளே போதுமானதாக இருந்த நிலையில், 331 வாக்குகள் பெற்று அரசாங்கம் தூக்கி எறியப்பட்டது.

பிரான்சில் 1962 ஆம் ஆண்டின் பின்னர் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் ஒரு அரசு கவிழ்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

பொது தேர்தல் நடைபெற்று ஒன்றரை மாதத்தின் பின்னர் Michel Barnier நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார்.

செப்டம்பர் 5 ஆம் திகதி பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட அவர், டிசம்பர் 5 ஆம் திகதி ஆட்சி கவிழ்க்கப்பட்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மூன்று மாதங்கள் மட்டுமே அவர் ஜனாதிபதியாக பதவி வகித்தார். ஐந்தாம் குடியரசில் குறுகிய கால பிரதமர் இவராவார்.

முன்னதாக, 3 மணிநேரத்துக்கும் மேலாக பாராளுமன்றத்தில் விவாதங்கள் இடம்பெற்றிருந்தன.

பாராளுமன்ற அமர்வில் நம்பிக்கை இல்லா பிரேரணை வாக்கெடுப்புக்குச் செல்லும் முன்னர், உறுப்பினர்கள், எதிர்கட்சித்தலைவர்கள் பலரும் தங்களது கருத்தை வெளியிட்டனர்.

இறுதியாக Michel Barnier உரையாற்றினார். அதன்போது, ”இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் எல்லாவற்றையும் இறுக்கமாக்கியுள்ளது.

அதேவேளை, மரீன் லு பென்னை சாடினார். ”தேசபக்தி மற்றும் இறையாண்மை பற்றிய ஒரே எண்ணம் எங்களிடம் இல்லை” எனவும் தெரிவித்தார்.

அத்தோடு, பிரான்சின் பிரதமர் பதவி தொடர்ந்தும் எனக்கு கெளரவமாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
Previous Post Next Post