மதுபோதையில் டிப்பர் செலுத்தி விபத்து! குழந்தை பலி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்!! (படங்கள்)

கிளிநொச்சியில் மதுபோதையில் டிப்பரை செலுத்தியவர் ஏற்படுத்திய விபத்தில் 2 வயது குழந்தையொன்று பலியாகியுள்ளது. குடும்பத்தினர் காயமடைந்தனர்.

நேற்று (25) மாலை இந்த சம்பவம் நடந்தது.

கிளிநொச்சி நகரிலுள்ள திருத்துமிடத்திலிருந்து இரணைமடு நோக்கி சென்ற டிப்பரே விபத்தை ஏற்படுத்தியது. சாரதி முழு மதுபோதையில் இருந்தார்.

கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அண்மையாக- வலயக்கல்விப் பணிமனைக்கு முன்பாக வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பத்தை மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் 2 வயது குழந்தை பலியானது.

தாயார் படுகாயமடைந்தார். தந்தையும், மற்றொரு மகளும் (6 வயது) காயமடைந்தனர். படுகாயமடைந்த தாயார், கிளிநொச்சி வைத்தியசலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

விபத்தையடுத்து, சாரதியை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், நையப்புடைத்தனர். தாக்குதலில் காயமடைந்த சாரதியும், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிப்பர் வாகனத்தையும் பொதுமக்கள் சேதப்படுத்தினர்.
Previous Post Next Post