யாழில் 3 பிள்ளைகளின் தாய்க்கு நடந்த துயரம்! சடலமாக மீட்பு!!

பருத்தித்திறை பொலிஸ் பிரிவில் கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் பெண் ஒருவரது சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது தாயரை நேற்று பிற்பகலிலிருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிச் சென்ற வேளை குறித்த கம்பி வலையால் மூடிய கிணற்றடி பகுதியில் தொலைபேசி சத்தம் ஒலித்துள்ள நிலையில் அக்கிணற்றை அவரது மகன் எட்டிப்பார்த்த வேளை கம்பி வலையால் மூடிய கிணற்றிற்குள் சடலம் காணப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான விமலதாஸ் சிந்துஜா என்ற 42 வயதுடைய தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post