யாழில் 3 பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு! உயிரிழப்புக்கான காரணம் வெளியானது!! (வீடியோ)

இரண்டாம் இணைப்பு

யாழ். கற்கோவளம் பகுதியில் உள்ள கம்பி வலையால் மூடப்பட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், நோயின் தாக்கத்தால் வலி தாங்க முடியாது தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், தனது மரணத்திற்கு தானே காரணம் என்று கடிதம் ஒன்றையும் அந்த பெண் எழுதி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச் சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான விமலதாஸ் சிந்துஜா என்ற 42 வயதுடைய தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

முதலாம் இணைப்பு


பருத்தித்திறை பொலிஸ் பிரிவில் கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் பெண் ஒருவரது சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது தாயரை நேற்று பிற்பகலிலிருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிச் சென்ற வேளை குறித்த கம்பி வலையால் மூடிய கிணற்றடி பகுதியில் தொலைபேசி சத்தம் ஒலித்துள்ள நிலையில் அக்கிணற்றை அவரது மகன் எட்டிப்பார்த்த வேளை கம்பி வலையால் மூடிய கிணற்றிற்குள் சடலம் காணப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான விமலதாஸ் சிந்துஜா என்ற 42 வயதுடைய தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post