யாழ். ஆசிரியருக்கு வாட்ஸ் அப்பில் லீலை! மாணவி ஒருவரின் தந்தை நையப்புடைப்பு!!

யாழில் ஆரம்பபாடசாலை ஒன்றில் கற்பிக்கும் இளம் குடும்பப் பெண்ணான ஆசிரியையுடன் வட்சப்பில் திருவிளையாடல்கள் புரிந்து வந்த குடும்பஸ்தர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

யாழ் புறநகர் பகுதியில் உள்ள ஆரம்பபாடசாலை ஒன்றில் கற்பிக்கும் திருமணமான ஆசிரியை தனது மாணவர்களுக்காக வட்சப் குறுாப் ஒன்றை செயற்படுத்தி வந்துள்ளார். அக் குறுப்பில் மாணவர்களின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களுக்கு தேவையான விடயங்களை பதிவிட்டு வந்துள்ளார்.

இந் நிலையில் குறித்த ஆசிரியையின் வட்சப் இலக்கத்திற்கு ‘Remo jude’ என்ற வட்சப் பெயருடன் பல தடவைகள் காதல் கவிதைகள் மற்றும் காதல் பாட்டுகள் அனுப்பப்பட்டு வந்துள்ளது. அதனை ஆசிரியை பொருட்படுத்தாது இருந்துள்ளார்.

தொடர்ச்சியாக குறித்த இலக்கத்திலிருந்து மெசேஜ் வரவே அந்த வட்சப் இலக்கத்தை தடை செய்துள்ளார். இருப்பினும் நேரடியாக அந்த இலக்கத்திலிருந்து மேசேஜ் வரத் தொடங்கியுள்ளது. பொறுமையிழந்த ஆசிரியை தனது கணவனிடம் இது தொடர்பாக கூறியுள்ளார்.

ஆசிரியை தடை செய்த வட்சப் இலக்கத்தின் தடையை நீக்கிய கணவன் அந்த இலக்கத்திற்கு ஹாய் என மெசேஜ் அனுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து Remo jude காதல் வானில் பறந்து பல பல கவிதைகள் பல்வேறு இடங்களில் தேடிப்பிடித்து அனுப்பியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஆபாசத்துடன் கூடிய கவிதைகள் மற்றும் பாட்டுக்களும் அதனைத் தொடர்ந்து ஆண்களின் ஆபாச தோற்றங்களுடன் கூடிய புகைப்படங்களும் ஆசிரியைக்கு அனுப்பியுள்ளார். ஆசிரியையைப் போல குறித்த இலக்கத்திற்கு தொடர்ச்சியாக பெண் போல சற் செய்த கணவன் ஒரு கட்டத்தில் தந்திரமாக தனது வீட்டுக்கு வருமாறு குறித்த நபருக்கு மெசேஜ் போட்டுள்ளார்.

அந்தத் தகவலை நம்பிய குடும்பஸ்தர் ஆசிரியையின் வீட்டுக்கு சென்ற போது அங்கு காத்திருந்த ஆசிரியையின் கணவனும் அவரது உறவுகளும் குறித்த குடும்பஸ்தரை நையப்புடைத்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான குறித்த குடும்பஸ்தரை அவதானித்த ஆசிரியை குறித்த குடும்பஸ்தர் தனது வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரின் தந்தை எனத் தெரியவந்துள்ளது. அதன் பின்னர் குடும்பஸ்தரனின் மனைவியை அங்கு அழைத்து வந்து கணவனை மனைவியிடம் காயங்களுடன் ஒப்படைத்ததாகத் தெரியவருகின்றது.
Previous Post Next Post