அதற்கமைய கடந்த அரசாங்கத்தின் போது 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சரும் சபை முதல்வருமான பிலம் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
362 அனுமதிப் பத்திரங்களில் 172 அனுமதிப் பத்திரங்கள் FL4 எனப்படும் சில்லறை மதுபான விற்பனை (wine stores) அனுமதிப் பத்திரங்களாகும்.
- மேல் மாகாணத்துக்கு - 110
- தென் மாகாணத்துக்கு - 48
- வடக்கு மாகாணத்துக்கு - 32
- கிழக்கு மாகாணத்துக்கு - 22
- மத்திய மாகாணத்துக்கு - 45
- வடமத்திய மாகாணத்துக்கு -14
- வடமேல் மாகாணத்துக்கு -30
- ஊவா மாகாணத்துக்கு - 30
- சப்ரகமுவ மாகாணத்துக்கு - 30
என்ற அடிப்படையில் 361 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. FL4 எனப்படும் சில்லறை மதுபான அனுமதிப் பத்திரங்கள் 172 அனுமதி பத்திரங்கள் இந்த காலப் பகுதியில் வழங்கப்பட்டுள்ளன.
- கொழும்பு 22
- கம்பஹா 18
- களுத்துறை 8
- காலி 9
- மாத்தறை 5
- அம்பாந்தோட்டை 5
- யாழ்ப்பாணம் 5
- கிளிநொச்சி 16
- வவுனியா 2
- மன்னார் 2
- திருகோணமலை 4
- மட்டக்களப்பு 1
- அம்பாறை 5
- கண்டி 11
- மாத்தளை 6
- நுவரெலியா 8
- அநுராதபுரம் 4
- பொலனறுவை 3
- புத்தளம் 6
- குருணாகலை 8
- பதுளை 9
- மொனராகலை 7
- இரத்தினபுரி 6
- கேகாலை 2
என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு எந்த விதமான மதுபான அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
புதிதாக மதுபானசாலைக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்று காலை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.