கனடாவில் தமிழ் தம்பதி அதிரடியாகக் கைது!

கனடாவில் ஆயுதங்களுடன் தமிழ் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரொறன்ரோவை சேர்ந்த 37 வயதான தனராஜ் தங்கராஜா மற்றும் 37 வயதான கிஷானி பாலச்சந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனராஜ் தங்கராஜா மீது 8 குற்றச்சாட்டுகளும், கிஷானி பாலச்சந்திரன் மீது 3 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த 3ஆம் திகதி மார்க்கம் வீதி மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை சோதனை செய்த போது இவர்கள் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post