பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நத்தார் பண்டிகை சில மணி நேரங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஈபிள் டவர் பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
ஈபிள் டவரில் உள்ள லிப்டில் இன்று (24) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து காரணமாக ஈபிள் டவர் பகுதியில் குவிந்திருந்த 1200 ற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.