பிரான்ஸில் மூடப்பட்ட நூற்றுக்கணக்கான பாடசாலைகள்!

இன்று நவம்பர் 5 ஆம் திகதி வியாழக்கிழமை பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர். அதையடுத்து இல் து பிரான்சின் பல பகுதிகளில் பலநூறு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

Seine-Saint-Denis மாவட்டத்தில் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. தலைநகர் பரிசில் உள்ள பாடசாலைகளில் மூன்றில் ஒரு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

Val-de-Marne மாவட்டத்தில் 150 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. Hauts-de-Seine மாவட்டத்தில் 60 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. Val-d'Oise மாவட்டத்தில் 100 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்கள், சிற்றுண்டிச் சாலை நடத்துனர்கள் என பல தரப்பும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், இல் து பிரான்சுக்குள் 65% சதவீத கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post