பிரான்ஸில் ஈழத் தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை!

பாரிஸின் புறநகர் பகுதியான லாகூர்நெவில் கடந்தவாரம் இனந்தெரியாத நபர் ஒருவரால் 29 வயதான தனுசன் என்ற ஈழத்தமிழர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கொலைக்குரிய காரணத்தை அறிவதற்கான தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பிரான்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை (06) முதுகில் சுடப்பட்டுகொல்லப்பட்ட 29 வயதான தனுசனின் கொலைக்குரிய காரணங்கள் தெளிவாக தெரியவில்லை என தெரிவித்துள்ள காவல்துறை சிறிய ரக தோட்டாவால் குறித்த நபர் கொல்லப்பட்டமைக்கான நோக்கம் மர்மமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் தனுசன் தனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், நண்பர் அங்கிருந்து அகன்றபோது நிலையில் தனுசனின் முதுகுபபக்கமாக சுடப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, சம்பவம் இடம்பெற்றபோது அயலில் வசித்த மக்கள் இரண்டு முறை வெடிச்சத்தங்களை கேட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் வசிக்கும் ஒரு பெண் ஒருவர் மசூதியிலிருந்து திரும்பியபோது தனுசன் சுடப்பட்டு தரையில் வீழ்ந்திருப்பதையும் அவதானித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து, உடனடியாக அந்த இடத்துக்குசென்ற அவசரகால சேவை பிரிவு பணியாளர்கள் தரையில் குற்றுயிராக கிடந்த தனுசனுக்கு விரைந்து முதலுதவிகளை செய்த போதிலும் அந்த முயற்சிகள் பலனளிக்காமல் சிறிது நேரத்தில் அவர் மரணடைந்துள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளது.

இந்த நிலையில், கொல்லப்பட்ட தனுசன் வாடகை வண்டி ஓட்டுநனராக பணியாற்றியதாவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணயில், கொல்லபட்ட தனுசனுக்கு எதிரிகள் யாரும் இல்லையென அவரது உறவினர்களும் நண்பர்களும் தெரிவித்துள்ளதால், கொலைக்கான காரணத்தை கண்டறியும் வகையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Previous Post Next Post