வவுனியாவில் இளம் குடும்பப் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்து மரணம்!!

வவுனியா பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு (29-11-2024) 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெரியகுளம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்ப பெண் ஒருவர் இரவு வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரிந்த நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டு செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவத்தில் செட்டிகுளம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளம் குடும்ப பெண்ணே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post