அவுஸ்ரேலியாவில் யாழ். குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!

அவுஸ்ரேலியாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் குடும்பத்துடன் அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வருகின்றார். நேற்று புதன்கிழமை மதியம் 2 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் வாசவன் உஷா (வயது - 54) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post