யாழில் பிறந்த குழந்தையை கிணற்றில் வீசிய கொடூரம்! தாயைத் தேடும் பொலிஸார்!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி, கைதடி பகுதியில் பிறந்த குழந்தையொன்று கிணற்றில் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

கைதடி மத்தி பகுதியில் இன்று (21) காலை குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தை பிரசவித்த உடனேயே கிணற்றில் வீசப்பட்டுள்ளது. குழந்தையின் தொப்புள் கொடியும் வெட்டப்படவில்லை.

குழந்தையை வீசியிருக்கலாமென்ற சந்தேகத்தில் 2 பிள்ளைகளின் தாயொருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
Previous Post Next Post