கிளிநொச்சியில் பரபரப்பு! பாலம் ஒன்றின் கீழ் இரண்டு சடலங்கள் மீட்பு!! (படங்கள்)


கிளிநொச்சியில், பாலம் ஒன்றின் அடியில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி A 35 வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை 10ஆம் கட்டை பாலத்திற்கு அடியில் இருந்து ஒன்றாக இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பாலத்தின் புனரமைப்புப் பணிகள் கைவிடப்பட்டு காணப்படும் நிலையில், அங்கு அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்தில் இருந்து தலைக்கவசம் இரண்டும், பயணப் பை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், தற்போது மீட்கப்பட்ட சடலங்கள் விபத்தினால் உயிரிழந்தவர்களது சடலங்களா, அல்லது வேறு காரணங்களினால் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பரந்தன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post