கிளிநொச்சியில் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தக் கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்றையதினம்(03.01.2025) 155ஆம் கட்டை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, போதை வெறியில் வாகனம் செலுத்தி இளம் தாய் மற்றும் பச்சிளம் குழந்தை ஆகியோரின் உயிர்களை பலியெடுத்தவர்களுக்கு சட்டம் உடனடியாக தண்டனை வழங்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்னுமொரு உயிர் பலி வேண்டாம், போதை வெறி சாரதிகளை கட்டுப்படுத்து, நீதிமன்றமே உன்னையே நம்புகின்றோம் மற்றும் வீதியில் எம்மை பலி கொடுக்காதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியிருந்தனர்.
கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இடம் பெற்ற டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவதினம் உயிரிழந்தது .
தந்தை தாய் மகள் ஆகியோர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தனர் இன்றைய தினம் தாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .
சம்பவத்தில் சாவகச்சேரி கல்வயல் பகுதியைச் சேர்ந்த கஜன் யாழினி வயது 34 என்ற இளம் தாய் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்த தந்தையும் மூத்த மகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.