
யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாண்டியன், “பிரவீனை டைவர்ஸ் செய்துவிட்டு ஓய்வு எடுப்பதற்காக லண்டன் சென்றுவிட்டார் விஜய் டிவி பிரியங்கா. உலகம் முழுவதும் இதுபோன்ற பிரபலங்களுக்கு பெரிய வலைசங்கிலி இருக்கிறது. நடிகைகளுக்கு மட்டுமே இப்படியான வாய்ப்பு கிடைக்கும்.. என்னுடைய ஈழ நண்பர்கள் பலர் லண்டனில் சினிமா தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் என்னிடம், எல்லா நடிகர், நடிகைகளுமே இங்கு விருந்தினராக வரவேற்க காத்திருக்கிறார்கள். அப்படி வரவேற்க காத்திருப்பவர்கள் ஈழத்தமிழர்கள்தான்.
ரம்பாவை திருமணம் செய்து கொள்வதற்காகவே, ஈழத்தமிழர் ஒருவர், ரம்பாவின் பல கோடி ரூபாய் கடனை அடைத்தார். திருமணத்துக்கு முன்பேயே 3 ரோஸஸ் படம் எடுத்து நஷ்டமடைந்த ரம்பாவின் கடனை அவர் அடைத்தார். இதற்கு காரணம், மறுநாள் காலையில் ரம்பாவுக்கு கல்யாணம் என்றால், அதற்கு முந்தின நாளே ரம்பாவை கடன்காரர்கள் அழைத்து சென்றுவிட்டார்கள். கல்யாணமாகி கனடா சென்றுவிட்டால் தங்களது பணம் கிடைக்காது, அதற்கு முன்பே கடனை செட்டில் செய்ய வேண்டும் என்றார்கள். எனவேதான், அந்த கடனை அடைத்து ரம்பாவை திருமணம் செய்தார் அந்த ஈழத்தமிழர்.
ஒரு நடிகைக்கு 20 லட்சம் ரூபாய் இப்படி நடிகைகள் மீது மிகப்பெரிய கிரேஸ் உள்ளது.. ஒரு நடிகைக்கு 10 லட்சம் தந்து வரவேற்பாளர்களாக அதாவது வெல்கம் கேள்ஸ் பணிக்கு அழைத்து செல்கிறார்கள். மிகப்பெரிய விஐபிகள் தங்களது தகுதியை நிரூபிப்பதற்காக, இப்படி நடிகைகளை வரவேற்பாளர்களாக நியமிப்பார்கள். வெறும் சம்பளம் மட்டுமே 10 லட்சம், மற்றபடி நடிகைகளை வரவேற்பது, ஃபிளைட் டிக்கெட், ஸ்டார் ஓட்டலில் ரூம் புக் செய்வது, கார், பாதுகாப்பு, டிரைவர், ஷாப்பிங், என இதற்கு தனியாக 10 லட்சம் ரூபாய் செலவாகும்.
இப்படி 20 லட்சம் ரூபாய் நடிகைக்கு தந்துவிட வேண்டும்.. மார்வாடிகள் இப்படி செய்ய மாட்டார்கள். ஈழத்தமிழர்கள்தான் இப்படி நடிகைகளுக்கு செலவு செய்வார்கள். நடிகர்கள் சென்றாலும் இப்படித்தான். பிரான்சில் விஜய் கடந்த வாரம் மாறுவேஷத்தில் சென்றுவிட்டு வந்தார். அங்குள்ள ஈழத்தமிழர்கள் என்னிடம் சொன்னார்கள். பிரான்சில் விஜய் முழுதாக முகத்தை மறைக்கும் தொப்பியை அணிந்து கொண்டு, ஷாப்பிங் மாலில் விஜய்யை பார்த்தாராம். அங்கே ஸ்விம்மிங் பூல், மசாஜ் சென்டர், விளையாட்டு, என ரிலாக்ஸ் செய்துள்ளார்.
ரஜினி ஒரு படம் முடிந்ததும் அமெரிக்கா போய்விடுவார். 15 நாள் ரெஸ்ட் எடுத்துவிட்டுதான் திரும்புவார். ஏன் என்றால் இந்த நடிகர்கள் 200, 300 கோடி என்று சம்பளம் வாங்குகிறார்கள். வெளிநாட்டில் செலவு செய்வதெல்லாம் சர்வ சாதாரணம்.
பிரியங்காவுக்கு 32 ஆகிறது. வசிக்கு 47 வயது என்கிறார்கள். இருவருக்கும் நீண்ட நாள் நட்பின் அடிப்படையின் காதல், கல்யாணம் என்று முடிந்துள்ளது. லண்டனுக்கு போய் வருவதற்கு 1 லட்சம் ஆகும். இவங்களுக்கு வடபழனியில் இருந்து தாம்பரம் போயிட்டு வருவது போல என்று தெரிவித்துள்ளார்.