யாழில் பிரான்ஸ் மாப்பிள்ளையை விட்டு விட்டு காதலனுடன் ஓட்டம்! யுவதியின் அந்தரங்கப் படங்கள் சமூகவலைத்தளத்தில்...!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதியொருவர், தனது காதலரான உடற்கட்டழகு பயிற்சியாளருடன் ஓடிச்சென்றதையடுத்து, அவரது அந்தரங்கப் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது. யுவதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிரான்ஸ் மாப்பிள்ளையே அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியை சேர்ந்த 24 வயதான யுவதியின் அந்தரங்கப் படங்களே கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

தனியார் நிதி நிறுவனமொன்றில் பணியாற்றும் இந்த யுவதி, கடந்த சில நாட்களின் முன்னர் தனது புதிய காதலரான உடற்கட்டழகு பயிற்சியாளருடன் வீட்டுக்கு தெரியாமல் ஓடிச் சென்றுவிட்டார்.

இந்த யுவதிக்கு கடந்த வருட இறுதியில் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மணமகன் பிரான்ஸில் இருக்கிறார். அவர் அங்கு நிரந்தர குடியுரிமையை கொண்டிருக்காததால், யுவதியை திருமணம் செய்து சட்டப்பூர்வமாக பிரான்ஸூக்கு அழைத்து செல்வதில் சிக்கல்கள் இருந்தன.

இதையடுத்து, யுவதியை சட்டவிரோதமா முறையில் பிரான்ஸ் அழைக்க மணமகன் குடும்பத்தினர் தீர்மானித்திருந்தனர். சுற்றுலா விசாவில் பிரான்ஸ் செல்ல சில மாதங்களாக திட்டமிடப்பட்டு வந்தது. விசாவில் சந்தேகம் ஏற்படாமலிருக்க, யுவதி, கடந்த சில மாதங்களின் முன்னர் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் சுற்றுலா விசாவில் சென்று வந்துள்ளார்.

அங்கு மணமகனும் வந்து, இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது மணமகன் சில பல அந்தரங்க புகைப்படங்களை எடுத்துள்ளார்.

சுற்றுலா விசாவில் சந்தேகம் ஏற்படாமலிருக்க யுவதி தனது உடற்தோற்றத்தையும் பெருமளவில் மாற்றியுள்ளார். வெள்ளையாக மாறுவதற்காக கொழும்பில் சிகிச்சையும் பெற்றுள்ளார். உடல் மெலிவதற்கு உடற்கட்டழகு பயிற்சி நிலையம் செல்லுமாறு மாப்பிள்ளை கூறியுள்ளார்.

இதன்படி யுவதி பலாலி வீதியிலுள்ள உடற்கட்டழகு பயிற்சி நிலையமொன்றுக்கு சென்று வந்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் யுவதிக்காக பிரான்ஸ் மாப்பிள்ளை பெரும் தொகை பணத்தை செலவிட்டுள்ளார். யுவதியின் தோற்ற மாறுதல் சிகிச்சைகளிற்காகவும் பெருமளவு பணத்தை செலவிட்டுள்ளார்.

எனினும், சட்டவிரோத பிரான்ஸ் பயணம் தொடர்ந்து இழுபறியில் இருந்த வந்த நிலையில், உடற்கட்டழகு பயிற்சி நிலையத்தில் யுவதிக்கு மற்றொரு காதல் மலர்ந்துள்ளது. அங்கு பயிற்சியாளராக இருந்த ஒருவருடன் யுவதி காதலித்து, கடந்த வாரம் வீட்டுக்கு தெரியாமல் ஓடிச்சென்றுவிட்டார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அனாமதேய பெயர்களில் உருவாக்கப்படும் பேஸ்புக் கணக்குகளில் யுவதியின் அந்தரங்கப்படங்கள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. முகநூல் நிர்வாகம் அந்த கணக்குகளை முடக்கினாலும், புதிய புதிய கணக்குகள் மூலம் படங்கள் பதிவேற்றப்பட்டு, உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரங்களிற்கு பகிரப்பட்டு வருகிறது.

யுவதி ஓடிச்சென்றதால் ஏமாற்றமடைந்த பிரான்ஸ் மாப்பிள்ளையே இந்த கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
Previous Post Next Post